spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹாலிவுட்டில் சோபிதா துலிபாலா... வெளியீட்டுக்கு தயாரான திரைப்படம்...

ஹாலிவுட்டில் சோபிதா துலிபாலா… வெளியீட்டுக்கு தயாரான திரைப்படம்…

-

- Advertisement -
இந்தி திரையுலகில் முக்கிய மற்றும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷோபிதா துலிபாலா. 2016- ம் ஆண்டு வெளியான ராமன் ராகவ் படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் ஷோபிதா. இதைத் தொடர்ந்து இரண்டாவது திரைப்படம் மலையாளத்தில் அமைந்தது. துல்கர் சல்மான் தயாரித்து நடித்த குரூப் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இரு பெரும் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், ஷோபிதாவின் முகம் வெளியே வரவில்லை.

இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஷோபிதா நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்தார். இதன் மூலம் தென்னிந்திய ரசிகர்களுக்கு பரீட்சயம் ஆனார் ஷோபிதா. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்திருந்தார். இதையடுத்து, பாலிவுட்டில் வெப் தொடரில் நடித்தார். இதில், அனில் கபூர் மற்றும் ஆதித்யா ராய் கபூர் ஆகியோரும் நடித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, இவர் ஹாலிவுட் திரையுலகில் அவர் தடம் பதித்திருக்கிறார். மனி மேன் என்ற படத்தில் அவர் நடித்து முடித்திருக்கிறார். ஸ்லம்டாக் மில்லியனர் தேவ் படேல் இப்படத்தை இயக்கி நடிக்கிறார். இதில் விபின் சர்மா, சிக்கந்தர் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் ஷோபிதா நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் முடிவடைய உள்ள நிலையில், படம் வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது.

MUST READ