spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுமீண்டும் காயமடைந்தார் கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர்!

மீண்டும் காயமடைந்தார் கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர்!

-

- Advertisement -

 

மீண்டும் காயமடைந்தார் கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர்!

we-r-hiring

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் காயமடைந்துள்ளார்.

கூட்டுக் குடிநீர் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய ரூ.148.54 கோடி நிதி ஒதுக்கீடு!

இந்திய கிரிக்கெட் அணியின் வலது கை பேட்ஸ்மேன் ஆகவும், வலது கை பந்து வீச்சாளராகவும் திகழ்பவர் ஸ்ரேயாஸ் ஐயர். இவருக்கு முதுகில் காயம் ஏற்பட்ட நிலையில், பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். உலகக்கோப்பைக்கு பிறகு அவரது பேட்டிங் மோசமானதாக இருந்த நிலையில், ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அவரை நிர்ப்பந்தித்தது.

அதன்படி, ரஞ்சிக்கோப்பையில் தனது மும்பை அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடினார். இறுதிப் போட்டியின் கடைசி நாளில் அவருக்கு மீண்டும் முதுகில் காயம் ஏற்பட்டது. வரும் மார்ச் 16- ஆம் தேதி தான் அவரது உடல்நிலை குறித்து அறிய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினார் – அமைச்சர் அன்பில் மகேஷ்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ