spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினார் - அமைச்சர் அன்பில் மகேஷ்!

பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினார் – அமைச்சர் அன்பில் மகேஷ்!

-

- Advertisement -

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான 138 தமிழ் பாடப்புத்தகங்களை வழங்கினார்.

we-r-hiring

இன்று (15.03.2024) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு வரையிலான 138 தமிழ் பாடப்புத்தகங்களை வழங்கினார். இப்புத்தகங்களை மாநிலங்களவை உறுப்பினர் திரு. எம்.எம். அப்துல்லா அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திரு. திண்டுக்கல் ஐ லியோனி அவர்கள், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர். கஜலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் இணை இயக்குநர் திரு. சங்கர சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

MUST READ