spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார் தமிழிசை!

மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார் தமிழிசை!

-

- Advertisement -

 

மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார் தமிழிசை!

we-r-hiring

பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட தற்போதைய எம்.பி.க்கள்!

புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் பதவியை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்த நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வருகை தந்தார். அப்போது டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனை பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை ஆரத்தழுவி வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், “மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கஷ்டமான முடிவை நான் இஷ்டமாக எடுத்துள்ளேன்; பா.ஜ.க.வின் வெற்றிக்காக இணைந்துள்ளேன். ராஜ்பவனை விட்டுவிட்டு மக்களின் நலனுக்காக கமலாலயத்திற்கு வந்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது!

அதன் தொடர்ச்சியாகப் பேசிய அண்ணாமலை, “அரசியல் அனுபவத்துடன் நிர்வாக அனுபவமும் பெற்று மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார் தமிழிசை. அதிகாரத்தை எல்லாம் விட்டுவிட்டு மக்கள் சேவையாற்ற அரசியலுக்கு வந்துள்ளார் தமிழிசை” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ