spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'இனிமேல்' ஆல்பம் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

‘இனிமேல்’ ஆல்பம் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். 'இனிமேல்' ஆல்பம் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!அந்த வகையில் இவர் தமிழில் தனுஷ் உடன் இணைந்து 3 படத்திலும், சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு படத்திலும், அஜித்துடன் இணைந்து வேதாளம் படத்திலும், விஜயுடன் இணைந்து புலி படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். கடைசியாக இவர் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் ஸ்ருதிஹாசன் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார். இந்நிலையில் தான் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள இனிமேல் என்ற ஆல்பம் பாடலுக்கு இசையமைத்துள்ளார் ஸ்ருதிஹாசன். இந்த ஆல்பம் பாடலில் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே மாஸ்டர், சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட படங்களில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆல்பம் பாடல் வரிகளை நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ளார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஆல்பம் பாடல் மார்ச் 25ஆம் தேதி வெளியாக இருப்பதாக டீசரை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ