spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா25 வருடங்களுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, ஏ ஆர் ரகுமான் காம்போ!

25 வருடங்களுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, ஏ ஆர் ரகுமான் காம்போ!

-

- Advertisement -

நடிகர் பிரபுதேவா, ஆரம்பத்தில் சில படங்களில் நடனமாடும் குழுவில் ஒருவராக இருந்தார் . பின் சங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் திரைப்படத்தில் இடம் பெற்ற சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலில் நடனம் ஆடியதன் மூலம் திரை பயணத்தை ஆரம்பித்தார். 25 வருடங்களுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, ஏ ஆர் ரகுமான் காம்போ!அதைத் தொடர்ந்து 1994 இல் வெளியான காதலன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும் பிரபுதேவா நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் நடன இயக்குனராகவும் உருவெடுத்தார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரபுதேவா. அதுமட்டுமில்லாமல் பேட்ட ராப், லைஃப் இஸ் பியூட்டிஃபுல் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் பிரபுதேவாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.25 வருடங்களுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, ஏ ஆர் ரகுமான் காம்போ! இந்த படத்தை என் எஸ் மனோஜ் எழுதி இயக்குகிறார். இந்த படத்தில் பிரபுதேவா உடன் இணைந்து யோகி பாபு, அஜூ வர்கிஸ், அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறார். படக்குழுவினர் வெளியிட்டுள்ள போஸ்டரில் பிரபுதேவா மற்றும் ஏ ஆர் ரகுமான் கூட்டணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 25 வருடங்களுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, ஏ ஆர் ரகுமான் காம்போ!காதலன் படத்தில் இடம்பெற்ற முக்காலா முக்காபுலா பாடல் என்று கேட்டாலும் அனைவரையும் குத்தாட்டம் போட வைக்கும். காதலன் படத்தில் இணைந்த இந்த கூட்டணி மீண்டும் இணைய இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

MUST READ