Homeசெய்திகள்அரசியல்வாக்கு கேட்பதை நிறுத்திவிட்டு வேட்பாளருக்கு ஒப்புதல் பெறும் அதிமுக

வாக்கு கேட்பதை நிறுத்திவிட்டு வேட்பாளருக்கு ஒப்புதல் பெறும் அதிமுக

-

- Advertisement -

உச்சநீதிமன்ற உத்தரவால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அதிமுக தேர்தல் பணிகள் முற்றுலுமாக முடங்கின.

admk

வேட்பாளரை பொதுக்குழு மூலம் தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் ஆணையிட்டதால் வேட்பாளர் ஒப்புதல் படிவம் விநியோகிக்கும் பணியில் அதிமுக எடப்பாடி தரப்பு ஈடுபட்டுள்ளது. பழனிசாமி அணி வேட்பாளர் தென்னரசுக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவை பெற முயற்சி மேற்கொண்டுவருகின்றனர். தொகுதி மக்களிடம் வாக்கு கேட்பதை நிறுத்திவிட்டு வேட்பாளருக்கு ஒப்புதல் பெற பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவை திரட்டிவருகின்றனர்.

we-r-hiring

முன்னதாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இ.பி.எஸ். அணி வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்பட்டு, நாளை இரவுக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களில், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மூலம், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு படிவம் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்திருந்தது. மேலும் உறுப்பினர்களின் வேட்பாளர் ஒப்புதல் படிவம் திங்களன்று தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

Home

ஈரோடு இடைத்தேர்தலுக்கு அதிமுக இரு பிரிவுகளாக பிரிந்து வேட்பாளர்களை அறிவித்த நிலையில், உச்ச நீதிமன்றம் நீக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களையும் சேர்த்து புதிய பொதுக்குழுவை நடத்தி பொதுவான வேட்பாளர் தேர்ந்தெடுக்க உத்தரவிட்டிருந்தது.

MUST READ