spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅருண் விஜய் நடிக்கும் புதிய படம்... பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு...

அருண் விஜய் நடிக்கும் புதிய படம்… பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு…

-

- Advertisement -
மிஷன் சேப்டர் 1 மற்றும் வணங்கான் படத்தைத் தொடர்ந்து அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்று முடிந்தது.

கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக அருண் விஜய் வலம் வருகிறார். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். 90களில் தொடங்கி அருண் விஜய் கிட்டத்தட்ட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய் முதன்முதலாக வில்லன் வேடத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் நடிகர் அருண் விஜயின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது

அருண் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மிஷன் சேப்டர் ஒன். விஜய் இப்படத்தை இயக்கியிருந்தார். படத்தில் பிரபல மலையாள நடிகை நிமிஷா சஜயன், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருந்தனர். பொங்கல் பண்டிகை ஒட்டி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இதைத் தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகி இருக்கும் திரைப்படம் வணங்கான். இப்படத்தை பாலா இயக்கி இருக்கிறார். படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது.
we-r-hiring

இந்நிலையில், அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்று முடிந்தது. மான் கராத்தே, கெத்து ஆகிய படங்களை இயக்கிய திருக்குமரன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இது அருண் விஜய் நடிக்கும் 36-வது படமாகும். படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்க, சித்தி இதானி மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் நாயகிகளாக ஒப்பந்தம் ஆகி இருக்கின்றனர். படத்திற்கு சாம் சிஎஸ் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி இருக்கிறது. பட பூஜையில், படத்தின் நடிகர் நடிகைகள் மட்டுமன்றி அருண் விஜய்யின் குடும்பத்தினர் மற்றும் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

MUST READ