spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமைக்கேல் ஜாக்சன் பயோபிக்... பான் இந்தியா இயக்குநர் விருப்பம்...

மைக்கேல் ஜாக்சன் பயோபிக்… பான் இந்தியா இயக்குநர் விருப்பம்…

-

- Advertisement -
மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்க விருப்பமுள்ளதாக பிரபல பான் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பெரிய அறிமுகமின்றி திரைக்கு வந்து இன்று தெலுங்கு திரையுலகில் முக்கிய அடையாளமாக மாறி இருப்பவர் பிரபல இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. இவர் விஜய் தேவரகொண்டாவை வைத்து அர்ஜூன் ரெட்டி என்ற படத்தை இயக்கினார். இத்திரைப்படம் தெலுங்கில் மாபெரும் ஹிட் அடித்தது. மேலும், விஜய் தேவரகொண்டாவை முன்னணி நடிகராகவும் உயர்த்தியது. இத்திரைப்படம் தமிழ் இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்திருப்பார். இந்தியில் இப்படத்தை சந்தீப் ரெட்டியே இயக்கினார்.

we-r-hiring
சந்தீப் ரெட்டி இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் அனிமல். இப்படத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்திருந்தனர். ப்ரீதம், விஷால் மிஸ்ரா, ஆஷிம் கெம்சன் ஆகியோர் படத்திற்கு இசை அமைத்தனர். டி சீரிஸ், சினி ஒன் நிறுவனங்கள் படத்தை தயாரித்தன. அப்பா மகன் உறவை பேசும் இத்திரைப்படம் வெளியான நாள் முதலே கலவையான விமர்சனங்களை பெற்றன. இருப்பினும், சந்தீப் ரெட்டியின் அனிமல் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர் இயக்கும் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தொடர்ந்து பிரபாஸை வைத்து ஸ்பிரிட் என்ற படத்தை அவர் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்க விருப்பம் உள்ளதாக இயக்குநர் சந்தீப் ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பயோபிக்கில் யார் நடிப்பார் என்பது தான் எனது கேள்வி. அப்படி ஒரு நடிகர் கிடைத்தால் நான் நிச்சயம் மைக்கேலின் பயோபிக்கை எடுப்பேன். அப்படத்தை ஹாலிவுட்டுக்கும் கொண்டு சென்று ஆங்கிலத்திலும் படம் இயக்குவேன் என்று தெரிவித்துள்ளார். இதனால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

MUST READ