spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅனிருத் மீது ரசிகர்கள் ஆவேசம்... மேடையில் நடந்த சம்பவம்...

அனிருத் மீது ரசிகர்கள் ஆவேசம்… மேடையில் நடந்த சம்பவம்…

-

- Advertisement -
அனிருத், தமிழ் திரை உலகின் முக்கியமான இசையமைப்பாளராக வலம் வருபவர். இவர் ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். சூப்பர் ஹிட் ஆகும் பெரும்பாலான பாடல்களில் அனிருத்தின் இசை முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்த வகையில் வேலையில்லா பட்டதாரி , கத்தி, நானும் ரவுடி தான் உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளர்கள் விருதை பெற்றுள்ளார். அதே சமயம் சிறந்த பாடகாருக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்த அனிருத், தற்போது பல மொழிப் படங்களிலும் கவனம் காட்டி வருகிறார். அண்மையில், அட்லீ இயக்கத்தி்ல வெளியான ஜவான் படத்திற்கும் அனிருத் இசை அமைத்திருந்தார். இப்படத்தின் மூலம் அவர் பாலிவுட்டுக்கும் அறிமுகமானார். தற்போது கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 மற்றும் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன், லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 ஆகிய படங்களுக்கு இசை அமைக்கிறார்

இதனிடையே அவர் இசை கச்சேரிகளையும் நிகழ்த்தி வருகிறார். தற்போது ஹக்கூம் டூரில் அனிருத் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில், லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மேடையில் பாடிக் கொண்டிருந்த அனிருத் மீது ரசிகர்கள் பொருட்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், இதைக் கண்டு கோபம் அடையாத அனிருத், அந்த பொருட்களை கையில் பிடிக்க முயற்சி செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இருப்பினும், இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ