Homeசெய்திகள்சினிமாஅசோக் செல்வனின் பொன் ஒன்று கண்டேன்... முன்னோட்டம் ரிலீஸ்...

அசோக் செல்வனின் பொன் ஒன்று கண்டேன்… முன்னோட்டம் ரிலீஸ்…

-

- Advertisement -
அசோக் செல்வன் மற்றும் வசந்த் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் பொன் ஒன்று கண்டேன் படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர் அசோக் செல்வன் நல்ல வரவேற்பைப் பெறும் படங்களைக் கொடுத்து கவனம் ஈர்த்து வருகிறார். ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் நெகிடி, கூட்டத்தில் ஒருவன், ‘ஓ மை கடவுளே‘ ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார். அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான சபா நாயகன் மற்றும் ப்ளூ ஸ்டார் படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ப்ளூ ஸ்டார் படத்தை பாரஞ்சித் தயாரித்திருந்தார். இதில் அவரது மனைவி கீர்த்தி பாண்டியனும் நடித்திருந்தார்.

we-r-hiring
தொடர்ந்து அசோக் செல்வன் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ப்ளூ ஸ்டார் படத்திற்கு பிறகு அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் பொன் ஒன்று கண்டேன். இதில் அசோக் மட்டுமன்றி வசந்த் ரவி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் நடித்துள்ளனர். ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு வசந்த் ரவி இதில் நடித்திருக்கிறார். கண்ட நாள் முதல் படத்தை இயக்கி பிரியா இப்படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.

இத்திரைப்படம் வரும் 14-ம் தேதி நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், பொன் ஒன்று கண்டேன் படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

MUST READ