spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவெள்ளை சட்டை அணிந்து நடிகர் விஜய் வாக்களித்தார்!

வெள்ளை சட்டை அணிந்து நடிகர் விஜய் வாக்களித்தார்!

-

- Advertisement -

 

வெள்ளை சட்டை அணிந்து நடிகர் விஜய் வாக்களித்தார்!

we-r-hiring

நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் வாக்களித்தார்.

100% வாக்களிக்க வலியுறுத்தி வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் தங்களின் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

அந்த வகையில், படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்றிருந்த நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று (ஏப்ரல் 19) காலை சென்னை திரும்பினார். அதைத் தொடர்ந்து, இன்று நண்பகல் 12.30 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் இருந்து கார் மூலம் நீலாங்கரை வாக்குச்சாவடி மையத்திற்கு வெள்ளை நிற சட்டையை அணிந்தவாறு வந்த நடிகர் விஜய், வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

‘மக்களவைத் தேர்தல் 2024’- காலை 11.00 மணி நிலவரம்….தமிழகத்தில் 24.37% வாக்குப்பதிவு!

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய பின், மக்களவைத் தேர்தலுக்கு தனது வாக்கை நடிகர் விஜய் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ