- Advertisement -
தெலுங்கில் விஜய்யை வைத்து படம் இயக்கிய பிரபல இயக்குநர், இந்தியில் அறிமுகமாக உள்ளார்.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகை விருந்தாக வெளியான திரைப்படம் வாரிசு. தில் ராஜூ இப்படத்தை தயாரித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இத்திரைப்படம் வெளியானது. வம்சி இப்படத்தை இயக்க, படத்தில் விஜய்க்கு நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்தார். மேலும், சரத்குமார், யோகிபாபு, ஷ்யாம், சங்கீதா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்


படத்திற்கு தமன் இசை அமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடல் பட்டி தொட்டி எங்கும் பெரியஹிட் அடித்தது. இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த அளவு படம் வெற்றி அடையவில்லை. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்தார் விஜய். அடுத்து, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார்



