spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது"- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

“தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

-

- Advertisement -

 

"தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது"- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

we-r-hiring

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இணையத்தில் வைரலாகும் கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை தமிழகத்திற்கு மத்திய அரசு விடுவித்துள்ள நிலையில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “இதுவரை தமிழக அரசுக் கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை; வெள்ளம் உட்பட எதற்கும் மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுப்பதே இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. இருந்தபோதே போதிய நிவாரணத் தொகையை மத்திய அரசு கொடுத்ததே இல்லை. தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சியில் கூட புயல் பாதிப்புக்கு மத்திய அரசு உரிய அளவு நிதி வழங்கியது கிடையாது. மத்தியில் பா.ஜ.க. மட்டுமல்ல, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும், மாநில அரசு கோரிய நிவாரண நிதியை விடுவித்ததே இல்லை. வெள்ளம் உட்பட எதற்கும் மாநில அரசுக் கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை.

ஜூன் மாதத்தில் மோதும் 2 கமல்ஹாசன் படங்கள்…. இதுதான் ரிலீஸ் தேதியா?

தமிழகத்தில் போதைப்பொருளைத் தடுக்க தவறியதால், இளைய சமுதாயம் மிக மோசமான அழிவுக்கு சென்றுக் கொண்டிருக்கிறது. போதைப்பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்காமல் தி.மு.க. அரசு அலட்சியம் காட்டி வருகிறது.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

MUST READ