- Advertisement -
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் குரங்கு பெடல் படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.
நடிகர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர் சிவகார்த்திகேயன். அயலான் திரைப்பட வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்நிலையில், நடிப்பு மட்டுமன்றி தயாரிப்பிலும் சிவகார்த்திகேயன் ஆர்வம் காட்டி வருகிறார்.
