- Advertisement -
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கடந்த ஆண்டு ஜவான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவர் பாலிவுட்டுக்கும் அறிமுகமானார். முதல் படத்திலேயே பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தை அட்லீ இயக்கியிருந்தார்.

ஜவான் படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து நயன்தாராவுக்கு, பாலிவுட்டிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இவர் தற்போது டெஸ்ட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக மண்ணாங்கட்டி படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் கண்ணப்பா எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. மாபெரும் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நடிகை நயன்தாரா கடவுள் பார்வதி வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் சிவனாக நடிப்பதாகவும் பேசப்பட்டது.




