நடிகர் அஜித் பிறந்தநாள் பரிசு… மங்காத்தா படத்தை இலவசமாக காணலாம்…
- Advertisement -
நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாள் பரிசாக, அவர் நடிப்பில் ஹிட் அடித்த மங்காத்தா திரைப்படத்தை இலவசமாக காணலாம் என்று பிரபல ஓடிடி தளம் அறிவித்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வௌியாகி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் விசில் அடிக்க வைத்த திரைப்படம் மங்காத்தா. இதில் அஜித்குமார் நாயகனாக நடித்திருந்தார். படத்தில் அர்ஜூன், த்ரிஷா, அஞ்சலி, வைபவ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மங்காத்தா திரைப்படம் வெங்கட் பிரபுவுக்கு மட்டுமில்லாமல், அஜித்குமாரின் திரை வாழ்விலும் ஒரு பெரிய மைல் கல்லாக அமைந்தது. படம் வெளியாகி வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது, இது மட்டுமன்றி விமர்சன ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது.

படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் தூள் கிளப்பின. குறிப்பாக படத்தில் அமைந்த அனைத்து பிஜிஎம்களும் ஹிட் அடித்தன. சினிமாவில் ஒரு சில படங்களின் தோல்வியால் பின்னடைவு அடைந்த நடிகர் அஜித்துக்கு மங்காத்தா திரைப்படம் ஒரு கம்பேக்காக அமைந்தது. படத்தில் அஜித்தின் நடிப்பும் மிரட்டலாக இருந்தது. நாயகனாக கொண்டாடப்பட்ட அஜித்குமார், இப்படத்தில் வில்லனாக கொண்டாடப்பட்டார்.

இந்நிலையில், இன்று நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று முதல் மே மாதம் 5-ம் தேதி வரை மங்காத்தா திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இலவசமாக காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல,, அஜித் நடித்த தீனா, பில்லா ஆகிய திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் ரி ரிலீஸ் ஆகியுள்ளன. இன்று 53-வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் அஜித்குமாருக்கு திரையுலகினர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.