வெற்றிமாறன் தயாரிப்பில் கவின்… அடுத்த மாதம் படப்பிடிப்பு…
- Advertisement -
வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான வெற்றிமாறன், முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தனுஷின் திரைவாழ்விலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதைத்தொடர்ந்து, தனுஷை வைத்து மீண்டும் ஆடுகளம் என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து, விசாரணை, வட சென்னை, அசுரன் படத்தை இயக்கினார். தமிழ் சினிமாவை மாறுபட்ட கோணத்தில் திரையில் காட்டும் முக்கிய இயக்குநர் வெற்றிமாறன்.

இவரது இயக்கத்தில் இறுதியாக வௌியான திரைப்படம் விடுதலை. இதில் சூரி நாயகனாக நடித்திருப்பார். மேலும், விஜய் சேதுபதி, கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது விடுதலை பாகம் 2 படத்தை இயக்கி வருகிறார். இயக்கம் மட்டுமன்றி தயாரிப்பிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், அடுத்ததாக அவர் தயாரிப்பில் கவின் நடிக்கிறார். வெற்றிமாறனின் உதவி இயக்குநர் விக்ரமன் அசோகன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்நிலைியல், பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.