- Advertisement -
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு டிராகன் என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது.
ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் . அடுத்து தான் இயக்கி கதாநாயகனாக நடித்த லவ் டுடே படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். வெறும் ஐந்து கோடியில் எடுக்கப்பட்ட லவ் டுடே படம் கிட்டத்தட்ட 90 கோடி ரூபாயை வசூலித்தது. இதனால் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் சற்று அதிகமாகவே இருந்து வந்தது.
இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு எல்ஐசி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து, கிரீத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பகுதிகளில் மாறி மாறி நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறார்
#PradeepAshwathCombo Titled – #DRAGON💥
Direction : Ashwath Marimuthu
Starring : Pradeep Ranganathan
Music : Leon James
Production : AGS— Trendswood (@Trendswoodcom) May 5, 2024
