spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமும்பையில் கடும் போக்குவரத்து நெரிசல்... காரை தவிர்த்து ஆட்டோவில் சென்ற ஸ்ருதிஹாசன்...

மும்பையில் கடும் போக்குவரத்து நெரிசல்… காரை தவிர்த்து ஆட்டோவில் சென்ற ஸ்ருதிஹாசன்…

-

- Advertisement -
தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தற்போது இவர் தமிழ், தெலுங்கு மொழி மட்டுமன்றி பாலிவுட் படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அண்மையில் ஸ்ருதி இசை அமைத்து பாடிய இனிமேல் என்ற இசை ஆல்பம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது மும்பையில் இவர் தங்கியுள்ளார். அங்கு ஒரு பாலிவுட் படத்தில் கமிட்டாகி இருக்கும் ஸ்ருதிஹாசன், மும்பையில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக, ஸ்ருதிஹாசன் காரில் சென்று கொண்டிருந்தபோது, போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார். காரில் அவரால் தொடர்ந்து பயணிக்க முடியாமல் போனது. இதையடுத்து, அவர் காரை ஒதுக்கி நிறுத்திவிட்டு, ஆட்டோ பிடித்து அதில் பயணம் செய்து சென்றார். இதையடுத்து, அவர் ஆட்டோவில் சென்ற வீடியோவையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஸ்ருதிஹாசன் ஆட்டோவில் சென்ற புத்திசாலித்தனமான முடிவு என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு முன்பாக, நடிகர் அமிதாப் பச்சனும் போக்குவரத்து நெரிசல் காரணமாக காரை ஒதுக்கிவிட்டு, ஆட்டோவில் பயணித்த சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

MUST READ