spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜெயம்ரவி நடிக்கும் ஜீனி.... பாடல் படப்பிடிப்பு சென்னையில் தொடக்கம்...

ஜெயம்ரவி நடிக்கும் ஜீனி…. பாடல் படப்பிடிப்பு சென்னையில் தொடக்கம்…

-

- Advertisement -
பொன்னியின் செல்வன் திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு ஜெயம்ரவி அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில், நயன்தாராவுடன் இணைந்து இறைவன் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து சைரன் என்ற படத்தில் ஜெயம்ரவி நடித்திருந்தார். கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில்வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது

இதையடுத்து ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் தான் ஜீனி. இப்படத்தை, மிஷ்கினின் உதவி இயக்குநர் அர்ஜூனன் இயக்கத்திலும் ஜெயம்ரவி நடித்து வருகிறார். இது அவரது 32-வது திரைப்படம் ஆகும். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவன் இந்த படத்தை தயாரிக்கிறது. ஜெயம்ரவியின் திரை வாழ்வில், மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கிருத்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவயானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

இதற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சுமார் 100 கோடி பட்ஜெட்டில் இத்திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது, ஜீனி படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு மட்டும் சென்னையில் நடைபெறுகிறது. வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிகிறது.

MUST READ