- Advertisement -
நடிகர் சிம்பு தக் லைஃப் திரைப்படத்தில் நடிக்கக் கூடாது என்றும், அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளது என்றும் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து கௌதம் மேனனுடன் இணைந்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்தார். இப்படம் வரவேற்பை பெற்றது. மேலும், அடுத்து பத்து தல திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் சிம்புவின் நடிப்பு பாராட்டப்பட்டது. இரு படங்களின் வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது சிம்பு நடிக்கும் 48-வது திரைப்படமாகும். இப்படத்திற்கு இதுவரை தலைப்பு வைக்கவில்லை, அதேபோல, படப்பிடிப்பும் தொடங்கவில்லை.


இதனிடையே, வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்த ஐசரி கணேஷ், அப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்புவை வைத்து கொரோனா குமார் படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போட்டிருந்தார். ஆனால், படம் அறிவித்து பல ஆண்டுகள் கடந்தும், அது தொடர்பான அப்டேட் எதுவும் இல்லை. இதனால் படம் கைவிடப்பட்டது என்றும் சிம்பு படத்திலிருந்து விலகினார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இத்திரைப்படத்திற்காக சிம்புவுக்கு 4.5 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஆனால், சிம்பு படத்தில் நடிக்காமல் ஏமாற்றிவிட்டதாக ஐசரி கணேஷ் நீதிமன்றத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து விசாரித்த நீதிமன்றம், சிம்பு திரைப்படங்களில் நடிக்க இடைக்கால தடை விதித்திருந்தது.

