சந்தானம் நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு… நாளை முதல் திரையரங்குகளில்….
- Advertisement -
சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் இங்க நான் தான் கிங்கு திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தானம். விஜய், அஜித், ரஜினி, கார்த்தி, சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஹிட் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துக் கொண்டிருந்த சந்தானம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இன்று வரை ஹீரோ வேடங்களை மட்டுமே ஏற்று நடித்து வருகிறார். அண்மையில் அவரது நடிப்பில் வெளியான டிடி ரிட்டர்ன், 80ஸ் பில்டப் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன

இறுதியாக சந்தானம் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. டிக்கிலோனா திரைப்பட இயக்குநர் கார்த்திக் யோகி இத்திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம், இங்க நான் தான் கிங்கு. இந்தியா பாகிஸ்தான் பட இயக்குனர் ஆனந்த் நாராயண் இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் சார்பில் அன்புச் செழியன் மற்றும் சுஷ்மிதா அன்பு செழியன் படத்தை தயாரித்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் சந்தானுடன் இணைந்து பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் முதல் தோற்றம் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்நிலையில், இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வௌியாக உள்ளது.