Homeசெய்திகள்சினிமாமோடியின் ஆட்சியில் இந்தியாவில் வளர்ச்சி... பிரதமருக்கு நடிகை ராஷ்மிகா புகழாரம்... மோடியின் ஆட்சியில் இந்தியாவில் வளர்ச்சி… பிரதமருக்கு நடிகை ராஷ்மிகா புகழாரம்…
- Advertisement -
கடந்த 10 ஆண்டுகால மோடியின் ஆட்சியில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்

தென்னிந்திய திரையுலகம் மட்டுமன்றி இந்திய திரையுலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்கும் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகத்தில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். இறுதியாக அவரது நடிப்பில் அனிமல் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றது. தற்போது தி கேர்ள் பிரண்ட், ரெயின்போ, புஷ்பா இரண்டாம் பாகம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மும்பை மற்றும் நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள அடல் சேது பாலம் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 10 ஆண்டு கால பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சியை பாருங்கள், இது பெருமை அளிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். மோடிக்கு ஆதரவாகவும், புகழாரம் சூட்டியும் ராஷ்மிகா மந்தனா பேசியிருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.