- Advertisement -
விவாகரத்து பெற்றாலும் எங்கள் நட்பு தொடரும் என்று பாடகி சைந்தவி தெரிவித்துள்ளார்.

கோலிவுட் இசை உலகில் பிரபல நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தவர்கள் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி. ஜிவி பிரகாஷ் பாடகரும், இசை அமைப்பாளரும் ஆவார். சைந்தவி பல திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். இவர்கள் இருவரும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இருவரும் அண்மையில் தங்களின் விவாகரத்தை அறிவித்திருந்தனர். கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த தம்பதி, விவாகரத்தை அறிவித்தது. இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


அதே சமயம், பலரும் இது குறித்து பல விதமான சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால் கோபம் அடைந்த ஜி.வி.பிரகாஷ், தனிப்பட்ட வாழ்வில் அத்துமீறி நுழைவது தவறு என்று பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர், பிரபலமான நபராக இருப்பதால் ஒருவரின் தனிப்பட்ட வாழ்வில் நுழைந்து விமர்சிப்பது ஏற்புடையது அல்ல என்றார்.



