வரும் 20 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க இருப்பதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.


இரு அணிகளாக பிளவுபட்டுள்ள அதிமுகவை இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியே வழிநடத்திவருகின்றனர். ஆனால் ஈரோடு இடைத்தேர்தலில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் பெறப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் தென்னரசு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரசார களத்தில் உள்ளார். இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற ஓபிஎஸ் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கின்றார்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க. அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னை, எக்மோர், பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஓட்டலில் வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
