சுந்தர். சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 1,2,3 ஆகிய மூன்று பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
அதைத் தொடர்ந்து அரண்மனை 4 திரைப்படத்தில் இயக்கியுள்ளார் சுந்தர் சி. இந்த படத்தில் தமன்னா, சந்தோஷ் பிரதாப், ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்தப் படம் கடந்த மே 3ஆம் தேதி திரையிடப்பட்டது. வெளியான முதல் நாளிலிருந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் அரண்மனை திரைப்படம், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 70 கோடிக்கு மேல் வசூல் செய்து இரண்டு வாரங்களைக் கடந்து வெற்றி நடை போடுகிறது. கோடை விடுமுறை என்பதால் விரைவில் இந்த படம் 100 கோடியை தொட்டுவிடும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் அரண்மனை 4 திரைப்படத்தை கைப்பற்ற பல ஓடிடி நிறுவனங்கள் போட்டி போடுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
அதாவது அரண்மனை 4 திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக ஓ டிடி உரிமையை விற்க சுந்தர் சி மிகவும் கஷ்டப்பட்டதாகவும் வியாபாரம் ஆகாது என பல ஓடிடி நிறுவனங்கள் இந்த படத்தை வாங்க மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது இந்த படத்திற்கு கிடைத்த ஏதோபித்த வரவேற்பை கண்ட ஓடிடி நிறுவனங்கள் எதிர்பார்த்த தொகையை விட அதிக தொகைக்கு படத்தை வாங்க போட்டி போடுவதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் அரண்மனை 4 திரைப்படத்தை எந்த ஓடிடி நிறுவனம் கைப்பற்ற போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- Advertisement -
