spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபல தொழிலதிபரை சந்தித்த ரஜினிகாந்த்... அபுதாபியில் காரில் பயணம்...

பிரபல தொழிலதிபரை சந்தித்த ரஜினிகாந்த்… அபுதாபியில் காரில் பயணம்…

-

- Advertisement -
அபுதாபி சென்ற நடிகர் ரஜினிகாந்த் அங்கு பிரபல தொழில் அதிபரை அவர் சந்தித்து பேசியிருக்கிறார்.

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது திரைப்படம் வேட்டையன் ஆகும். இத்திரைப்படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கி புகழ்பெற்ற ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் படத்திற்கு இசை அமைக்கிறார். வேட்டையன் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

we-r-hiring
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் தொடங்கி மும்பை, புதுச்சேரி, கேரளா, நெல்லை என மாறி மாறி நடைபெற்று வந்தது. மும்பையில் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அண்மையில் இப்படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைவு பெற்றன. இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஓய்வெடுக்க அபுதாபி புறப்பட்டுச் சென்றார்.

https://x.com/i/status/1793110352328356321

அபுதாபி சென்ற ரஜினிகாந்த், அங்கு லுலு குழுமத் தலைவரும், தொழில் அதிபருமான எம்.ஏ.யூசூப் என்பவரை சந்தித்துப் பேசினார். அரபு நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்தும் நபராக விளங்கும் யூசுப்புடன், ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரஜினிகாந்த் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ