spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிக்ரம் போன்ற கலைஞனை பார்த்ததில்லை... புகழாரம் சூட்டிய தங்கலான் பட வசனகர்த்தா...

விக்ரம் போன்ற கலைஞனை பார்த்ததில்லை… புகழாரம் சூட்டிய தங்கலான் பட வசனகர்த்தா…

-

- Advertisement -
தமிழ் திரையுலகில் ஹேட்டர்ஸே இல்லாத ஒரு நாயகன் என்றால் அது சியான் தான். சியான் என கொண்டாடப்படும் விக்ரம் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவரது நடிப்பில் இறுதியாக பொன்னியன் செல்வன் திரைப்படங்கள் வெளியாகின. கரிகால சோழனாக விக்ரம் நடித்து பாராட்டைப் பெற்றார். விக்ரம் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகியுள்ள திரைப்படம் தங்கலான். பா ரஞ்சித் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், இப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போகிறது.

இதையடுத்து, விக்ரம் நடிக்கும் 62 படத்தின் அறிவிப்பு வெளியானது. படத்திற்கு வீர தீர சூரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தை இயக்குகிறார். ரியா ஷிபு படத்தை தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து, எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், நடிகர் விக்ரம் அளவுக்கு அரப்பணிப்புள்ள கலைஞனை நான் பார்த்தில்லை என்று தங்கலான் படத்தின் வசனகர்த்தா அழகிய பெரியவன் தெரிவித்துள்ளார். அவர் நிறைய நூல்களை வாசிக்கும் பழக்கம் கொண்டவர் என்றும், நாங்கள் இலக்கியம் குறித்து நீண்ட நேரம் பேசுவோம் என்றும் அழகிய பெரியவன் தெரிவித்துள்ளார்.

MUST READ