spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா... வெளியானது புது அப்டேட்...

ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா… வெளியானது புது அப்டேட்…

-

- Advertisement -
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த புது அப்டேட் வௌியாகி இருக்கிறது.

2017-ம் ஆண்டு வெளியான பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் நடிகர் தனுஷ். ஒரு நடிகராக தன்னை முன்னிறுத்திக் கொண்ட நடிகர் தனுஷ் தென்னிந்திய மொழிகள் மட்டுமன்றி பாலிவுட், ஹாலிவுட்டிலும் தடம் பதித்து விட்டார். நடிப்பைத் தாண்டி தற்போது இயக்கத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் இயக்கிய முதல் திரைப்படம் பவர் பாண்டி. இதில் ராஜ்கிரண், பிரசாந்த் ஆகியோருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படம் வரவேற்பை பெற்றது.

we-r-hiring
இதைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் படத்தில் அடுத்தடுத்து நடித்தார் தனுஷ். தற்போது அவரின் 50-வது திரைப்படமான ராயன் படத்தை அவரே இயக்கி நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் தனுஷூடன் இணைந்து காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்திலிருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் ஜூன் மாதம் 2-ம் தேதி சென்னை சாய் ராம் கல்லூரியில் நடைபெறும் என்று தகவல் வௌியாகியுள்ளது. ஏற்கனவே ஜூன் 1-ம் தேதி நேரு அரங்கில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், இந்தியன் 2 படத்தின் நிகழ்ச்சியும் நடைபெறுவதால், தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

MUST READ