spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..

-

- Advertisement -
சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமான நிலையங்கள், முக்கிய பிரபலங்களின் வீடுகள், அரசியல் தலைவர்களின் இல்லங்களுக்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. அந்தவகையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் உள்ள பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த பெற்றோர் அவசர அவசரமாக பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பள்ளிகளில் சோதனை மேற்கொண்ட போலீஸார், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரிவித்தனர்.

வெடிகுண்டு மிரட்டல்

we-r-hiring

இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இ-மெயில் மூலம் மர்மநபர் ஒருவர் சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து காவல் துறையினர் சென்னை விமான நிலையம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விமான நிலைய வளாகம், வாகன நிறுத்துமிடம், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் போலீசார் நடத்திய தீவிர சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. போலீஸாரின் விசாரணை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது. மேலும், இது போன்ற விஷம செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்களை விரைவில் கைது செய்வோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ