spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகுருப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியானது!

குருப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியானது!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் 6244 காலிபணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு வருகிற ஜுன் 9ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

we-r-hiring

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 01/2024, நாள் 30.01.2024- இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV (தொகுதி-IV பணிகள்)-இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறி வகை(OMR முறை) தேர்வு 09.06.2024 முற்பகல் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை(Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

MUST READ