- Advertisement -
திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமாக இருப்பதாகவும், திருமணத்தில் என் மாமனாருக்கு விருப்பம் இல்லை என்றும் பரவிய வதந்திகள் குறித்து நடிகை மஞ்சிமா மோகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கோலிவுட் சினிமாவின் ஒரு நட்சத்திர தம்பதி மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் கார்த்திக். இளம் நடிகராக முன்னேறி வருபவர் கௌதம் கார்த்திக். மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதையடுத்து என்னமோ ஏதோ, வை ராஜா வை , முத்துராமலிங்கம், ரங்கூன், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சிம்புவின் பத்து தல திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.


இவர் நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். நடிகை மஞ்சிமாவும் தமிழ் மற்றும் மலையாள மொழியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானார். இதையடுத்து சத்ரியன், தேவராட்டம், எஃப்ஐஆர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.



