காதலருடன் பிரியா பவானிசங்கர் ஜாலி சுற்றுலா… புகைப்படங்கள் வைரல்…
- Advertisement -

கல்யாணம் முதல் காதல் வரை என்ற சின்னத்திரையில் நடிகையாக திரை வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக மாறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர். சின்ன திரையில் இருந்து வெளிவந்து வெள்ளி திரையில் இவர் நடித்த முதல் திரைப்படம் மேயாத மான். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து பிரியா பவானி சங்கர் படங்களில் கமிட்டாகி வருகிறார். தமிழில் சிம்பு, தனுஷ், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடிக்கிறார். தமிழ் மட்டுமன்றி தற்போது தெலுங்கிலும் பிரியா பவானி சங்கர் ஆர்வம் செலுத்தி வருகிறார். டோலிவுட்டிலும் அவருக்கு பல படங்கள் கைவசம் உள்ளன. இதனிடையே தமிழில், இந்தியன் 2, டிமான்டி காலனி ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையே அவர் தனது கல்லூரி காலத்திலிருந்து காதலித்து வரும் ரத்னவேலு என்பவருடன் ஜாலியாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்றிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி வைரலாகி வருகின்றன. அண்மையில் பிரியா பவானி சங்கர் நடிப்பில் ரத்னம் திரைப்படம் வௌியானது. இதில் விஷாலுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.