- Advertisement -
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 3-வது குழந்தை பிறந்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயனுக்கு இன்று உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். மெரினா திரைப்படத்தில் தொடங்கிய இவரது திரைப்பயணம், இன்று வரை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. மெரினா படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். காதல் திரைப்படங்களில் மட்டுமன்றி, நகைச்சுவை, ஆக்ஷன், கமர்ஷியல் திரைப்படங்களிலும் நடித்து வெற்றி கண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன்.


இவரது நடிப்பில் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த அயலான் திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியானது. இதைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். அமரன் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



