- Advertisement -
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநராக உருவெடுத்துள்ளவர் இயக்குநர் அட்லீ. இவர் பிரபல இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். ராஜா ராணிபடத்தின் மூலம் அவர் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை அடுத்து, முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இதைத் தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து பல படங்களை இயக்கி அதன் மூலம் வெற்றியும் கண்டார்.

இதையடுத்து, பாலிவுட் திரையுலகில் நுழைந்த அட்லீ ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்த இத்திரைப்படம், சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பெரும் சாதனை படைத்தது.





