- Advertisement -
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகம் மட்டுமன்றி இந்தி மொழியிலும் பெண் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. ஸ்ரீதேவி – போனி கபூர் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜான்வி கபூர், இரண்டாவது மகள் குஷி கபூர்.தற்போது ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா படத்தில் நாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் தடம் பதிக்க உள்ளார். அடுத்து ராம்சரண் நடிக்கும் 16-வது திரைப்படத்திலும் ஜான்வி கபூர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். புச்சிபாபு இப்படத்தை இயக்குகிறார்.

ஜான்வி கபூர் நடிப்பில் இறுதியாக வௌியான திரைப்படம் மிஸ் அண்ட் மிஸஸ் மாஹி. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே நடிகை ஜான்வி கபூர், முன்னாள் மராட்டிய முதலமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் பேரனும், நடிகருமான ஷிகர் பஹாரியாவை காதலித்து வருகிறார்.




