spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா10 வருடங்களில் சினிமாவில் இருக்க மாட்டேன்... நடிகர் விஜய் சேதுபதி அதிரடி....

10 வருடங்களில் சினிமாவில் இருக்க மாட்டேன்… நடிகர் விஜய் சேதுபதி அதிரடி….

-

- Advertisement -
தமிழ் சினிமாவில் மக்கள் செல்வனாக கொண்டாடப்படுபவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களிலும் விஜய் சேதுபதி தன் நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்வார். முதன் முதலாக தமிழில் வில்லன் வேடத்தில் நடித்தார். இதை தொடர்ந்து அவருக்கு பல வாய்ப்புகள் குவிய தொடங்கின. அடுத்து தெலுங்கிலும் ஒரு படத்தில் வில்லனாக நடித்தார். இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அவருக்கு தெலுங்கிலும் வாய்ப்புகள் குவியத் தொடங்கியன.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் அசத்திய விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் வெற்றிக்கு பிறகு, விஜய் சேதுபதி நடிப்பில் ஹிந்தியில் இறுதியாக வெளியான திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ். திரைப்படத்தில் கத்ரினா கைஃப் நாயகியாக நடித்திருந்தார்.

தற்போது, தனது 50-வது படமான மகாராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நாளை ஜூன் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து 51-வது படத்திலும் நடித்து முடித்துவிட்டார். ஏஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இன்னும் 10 ஆண்டுகளில் சினிமாவில் இருக்க மாட்டேன் என்று விஜய் சேதுபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், ஒரு நாளும் நான் பணத்தை கொட்டி எனது மகனிற்காக படம் தயாரிக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

MUST READ