Homeசெய்திகள்அரசியல்ஓபிஎஸ் திமுகவின் ’பீ’ டீம் - ஜெயக்குமார்

ஓபிஎஸ் திமுகவின் ’பீ’ டீம் – ஜெயக்குமார்

-

- Advertisement -

ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழாவில் உச்சநீதிமன்றம் சிறப்பான தீர்ப்பு வழங்கியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “பொதுச்செயலாளர் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும், ஓ.பி.எஸ். எத்தனை மேல்முறையீடு செய்தாலும் வெற்றி எங்களுக்கே. ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் எம்.பி.யாக இருந்தாலும், அவருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை, இது குறித்து மக்களவைக்கு கட்சி சார்பில் தெரிவிப்போம். ஈரோடு கிழக்கில் அதிமுக பெறும் வெற்றி நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். அதிமுக சட்ட விதிகளின்படி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். திமுகவின் B டீமாக இருக்கும் ஓபிஎஸ்-ஐ எப்படி அதிமுகவில் சேர்க்க முடியும். ஓபிஎஸ் இன்று அடையாளம் இல்லாதவராக மாறியுள்ளார்.

அதிமுகவுக்கு துரோகம் செய்து, அழித்துவிடவேண்டும் என செயல்பட்டவர் ஓபிஎஸ். அவர் தொண்டர்கள் மற்றும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர். ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் பெறும் வெற்றி, பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.  நாங்கள் நேர்மையான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம். தேனி எம்.பி. ரவிந்திரநாத்தை அதிமுகவில் மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை. அவர் அதிமுகவே இல்லை. இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.  உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியே, தேர்தல் ஆணையம் செயல்படும்” எனக் கூறினார்.

 

MUST READ