spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபட தயாரிப்பில் நஷ்டம்... சர்க்கஸில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்...

பட தயாரிப்பில் நஷ்டம்… சர்க்கஸில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்…

-

- Advertisement -
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் வித்யுத் ஜம்வால். இவர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்த சக்தி எனும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக அவர் நடித்தார். இதையடுத்து, அதே ஆண்டில் வெளியான பில்லா 2 படத்தில் நடித்திருப்பார். அஞ்சான் திரைப்படத்தில் சூர்யாவுக்கு நண்பராக வித்யுத் நடித்து பிரபலம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் தமிழில் நடிக்கவில்லை. பாலிவுட்டில் கவனம் செலுத்தி வந்தார்.
 தற்போது தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 23-வது திரைப்படத்தில் வித்யுத் வில்லனாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இவர் இந்தியில் கிராக் என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார். இதில் எமி ஜாக்சன், அர்ஜூன் ராம்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சுமார் 45 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 12 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய வித்யுத், பட தயாரிப்பால் ஏற்பட்ட இழப்பால் பிரெஞ்சு சர்க்கஸ் குழுவுடன் இணைந்து, அங்கிருந்து மீண்டும் நிதியை திரட்டி என் கடனை அடைத்தேன் என்று தெரிவித்தார்.

MUST READ