Homeசெய்திகள்சென்னைவாகன பதிவு எண்கள் முறையாகவும் தெளிவாகவும் பெருத்தி இருக்க வேண்டும்

வாகன பதிவு எண்கள் முறையாகவும் தெளிவாகவும் பெருத்தி இருக்க வேண்டும்

-

- Advertisement -

வாகன பதிவு எண்கள் முறையாகவும் தெளிவாகவும் பெருத்தி இருக்க வேண்டும்

சென்னை நகரில் இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள வாகன பதிவு எண்கள் முறையாகவும் தெளிவாகவும் சட்ட விதிக்கு உட்பட்டு இருக்க வேண்டும் எனவும் இல்லையேல் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வட சென்னை போக்குவரத்து துணை ஆணையர் ஹர்ஸ் சிங் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு குற்ற செயல்களை தடுக்கவும், விபத்துகளில் இடுபட்டவர்களை உடனடியாக கண்டறியவும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களை இயக்கவும், பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தி வருகிறது.

சென்னை நகர் முழுவதும் வாகனங்களை கண்காணிக்க 250க்கும் மேற்பட்ட நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு எளிதில் வாகன பதிவு எண்கள் அந்த கேமராவில் பதிவு செய்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுவர்களை கண்டறிய வழி செய்யப்பட்டுள்ளது.

we-r-hiring

அதன் ஒரு பகுதியாக வடசென்னை போக்குவரத்து காவலுக்கு உட்பட்ட பூக்கடை பகுதியில் துணை ஆணையர் ஹர்ஸ் சிங் மற்றும் காவல் உதவி ஆணையர் பாஸ்கரன் உள்ளிட்ட காவல்துறையினர் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

வாகன பதிவு எண்கள் நம்பர் பிளேட் முறையாக அரசு விதிக்குட்பட்டு இல்லாத வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். அப்போது சட்ட விதிகளுக்கு உட்படாமல் பொருத்தப்பட்டிருந்த நம்பர் பிளேட்டுகளையும், நம்பர் பிளேட்டுகளே இல்லாத வாகனங்களையும் தடுத்து நிறுத்தி முதல் முறையாக 500 ரூபாயும் இரண்டாவது முறை பிடிபடும் வாகனங்களுக்கு 1500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

தொடர்ந்து இதுபோல் வாகனங்களை இயக்கினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை துணை ஆணையர் ஹர்ஸ் சிங் தெரிவித்தார் .

அப்போது பேசிய பூக்கடை பகுதியில் துணை ஆணையர் ஹர்ஸ் சிங், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதே போல் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை வாகன தணிக்கையின் போது எச்சரித்து அனுப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

MUST READ