விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி கடைசியாக ரோமியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் விஜய் ஆண்டனி வள்ளி மயில், ஹிட்லர், மழை பிடிக்காத மனிதன் என பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நிலையில் ஒவ்வொரு படங்களும் அடுத்தடுத்து வெளியாக தயாராகி வருகிறது. அந்த வகையில் விஜய் ஆண்டனியின் ஹிட்லர் திரைப்படம் 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என ஏற்கனவே பட குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன், முரளி ஷர்மா, தலைவாசல் விஜய், ரமணா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தான் மழை பிடிக்காத மனிதன். இன்ஃபினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ராஜாமணி, விஜய் ஆண்டனி ஆகியோர் இசையமைத்துள்ளனர் விஜய் மில்டன் ஒளிப்பதிவு பணிகளை கையாண்டுள்ளார்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் இந்த படத்தின் டீசர், பாடல்கள், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்நிலையில் இந்த படமானது வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் ஆண்டனி ஒரே மாதத்தில் இரண்டு படங்களை களம் இறக்கப் போகிறார் என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.