HomeBreaking News2036-க்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்: 'வெற்றித் தமிழகம்' இலக்கை அறிவித்தார் நிதியமைச்சர் மரிய வில்சன்!

2036-க்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்: ‘வெற்றித் தமிழகம்’ இலக்கை அறிவித்தார் நிதியமைச்சர் மரிய வில்சன்!

-

- Advertisement -

தமிழகத்தைச் சுபீட்சமான பாதையில் கொண்டு செல்லும் நோக்கில், மாநிலத்தை வறுமையற்ற ஒன்றாக மாற்றுவதற்கும், 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் (ரூ.142.6 லட்சம் கோடி) பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்துவதற்கும் தவெக அரசு உறுதியேற்றுள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர்

we-r-hiring

தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டுக்கான (2026-27) பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரை நிகழ்த்தியபோது நிதியமைச்சர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஆட்சி:

பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன்:

“முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற இந்த மிகக் குறுகிய காலத்திலேயே பல துறைகளில் கணிசமான முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளன. மக்களின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் திறம்படச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த வெற்றி என்பது ஒரு தனிப்பட்ட கட்சியின் வெற்றி அல்ல; இது ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் வெற்றி” என்று குறிப்பிட்டார்.

‘வெற்றித் தமிழகம்’ – 10 தூண்கள் கொண்ட தொலைநோக்குத் திட்டம்:

மக்களின் நலனுக்காக அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 10 தூண்களைக் கொண்ட ‘வெற்றித் தமிழகம்’ என்ற தொலைநோக்குத் திட்ட ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அரசால் அறிவிக்கப்படும் திட்டங்கள் 1-ஆம் ஆண்டு, 3-ஆம் ஆண்டு மற்றும் 5-ஆம் ஆண்டு என வகைப்படுத்தப்பட்டு, விரைவாகச் செயல்வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

பொருளாதார வளர்ச்சி மற்றும் மனிதவள முதலீடு:

தேசிய அளவில் பல்வேறு சமூகப் பொருளாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில், வறுமை இல்லாத மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கக்கூடிய மாநிலமாகத் தமிழகத்தை மாற்றுவதே அரசின் முதன்மை இலக்காகும்.

இதற்காகத் தேவையான சமூகப் பொருளாதாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டு முதலீடுகளைத் தவெக அரசு முழு வீச்சில் மேற்கொள்ளும் என்றும் நிதியமைச்சர் தனது உரையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

செங்கடல் பகுதியில் அதிர்ச்சி- இந்தியக் கொடி ஏந்திய கப்பல் மீது கொடூரத் தாக்குதல்! 14 மாலுமிகள் பத்திரமாக மீட்பு

MUST READ