2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. 139 பேருக்கு நாட்டின் உயரிய பத்ம விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் 2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் உயரிய குடிமகன் விருதான பத்ம விருதுகளை 139 பேருக்கு நடப்பாண்டில் மத்திய அரசு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதும் , 19 பேருக்கு பத்மபூஷன் விருதும் , 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் மத்திய அரசு வழங்குகிறது. பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 139 பேரில் 23 பேர் பெண்கள் எனவும் ,10 பேர் அயல்நாடுகளை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் மற்றும் சிறப்பு விருத்தாளர் என்றும் , மற்றும் மறைந்த 13 பேருக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும் உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பத்ம விருதுகள் நடப்பாண்டு மார்ச் ,ஏப்ரல் உள்ளிட்ட மாதங்களில் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவரால் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் எத்தனை பேர்?

தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு! – 3 பேருக்கு பத்மபூஷன் விருதும், 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன் படி 139 பேருக்கு நடப்பாண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், அதில் தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது.
பத்மபூஷன் விருது பெரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் (3) :
- நல்லி குப்புசாமி செட்டி (வர்த்தகம் & தொழில்)
- எஸ்.அஜித்குமார் (திரைப்படத்துறை)
- சோபனா சந்திரகுமார் (திரைப்படத்துறை)
பத்மஸ்ரீ விருது பெரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் (10) :
- குருவாயூர் தொரை (தாள கலைஞர்)
- கே.தாமோதரன் (பிரபல சமையல் கலைஞர்)
- ஸ்ரீ லக்ஷ்மிபதி ராமசுப்பையர் (இலக்கியம் மற்றும் கல்வி)
- எம்.டி.ஸ்ரீனிவாஸ் (அறிவியல் மற்றும் பொறியியல்)
- புரிசை கண்ணப்ப சம்பந்தம் (கலைத்துறை)
- அஷ்வின் (விளையாட்டுத்துறை)
- ஆர்.ஜி.சந்திரமோகன் (வர்த்தகம் & தொழில்துறை)
- ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி (கலைத்துறை)
- சீனி விஸ்வநாதன் (இலக்கியம் & கல்வி)
- வேலு ஆசான் (கலைத்துறை)
உள்ளிட்ட 13 பேருக்கு மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுகள் வரும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவரால் வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.