HomeBreaking Newsமிகவும் எதிர்பார்க்கப்படும் அஜித்தின் 'விடாமுயற்சி' பட டிரைலர் வெளியீடு!

மிகவும் எதிர்பார்க்கப்படும் அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட டிரைலர் வெளியீடு!

-

- Advertisement -

அஜித்தின் விடாமுயற்சி பட டிரைலர் வெளியாகி உள்ளது.மிகவும் எதிர்பார்க்கப்படும் அஜித்தின் 'விடாமுயற்சி' பட டிரைலர் வெளியீடு!

அஜித் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு துணிவு திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் அஜித் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் நடித்து முடித்து இருந்தாலும் இரண்டு ஆண்டுகளாக நடிகர் அஜித்தை மீண்டும் திரையில் காண முடியவில்லை என்ற ஏமாற்றம் ரசிகர்கள் பலருக்கும் இருந்து வருகிறது. இதற்கிடையில் விடாமுயற்சி, குட் பேட் அட்லி ஆகிய இரண்டு படங்களில் இருந்தும் அஜித் தொடர்பான புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதே சமயம் நடிகர் அஜித் தனது அணியினருடன் துபாயில் நடைபெற்ற 24H தொடரில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை வென்றார்.மிகவும் எதிர்பார்க்கப்படும் அஜித்தின் 'விடாமுயற்சி' பட டிரைலர் வெளியீடு! அஜித்தின் இந்த வெற்றியை ரசிகர்கள் தங்களின் வெற்றியாக கொண்டாடி தீர்த்தனர். இருப்பினும் அஜித்தின் 62 வது படமான விடாமுயற்சி திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி படம் ஏற்கனவே பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் பொங்கல் ரேஸில் இருந்து விலகியது. இதற்கிடையில் விடாமுயற்சி படத்திலிருந்து டீசரும், சவதீகா பாடலும் வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது.மிகவும் எதிர்பார்க்கப்படும் அஜித்தின் 'விடாமுயற்சி' பட டிரைலர் வெளியீடு! இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரைலரில் அஜித் செம ஸ்டைலான கிளாஸியான லுக்கில் காணப்படுகிறார். மேலும் ட்ரைலரில் வெறித்தனமான ஆக்சன் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. மேலும் அஜித், திரிஷா ஆகிய இருவருக்குமான ரொமான்டிக் காட்சிகளும் காண்பிக்கப்படுகின்றன. இந்த ட்ரெய்லர் விடாமுயற்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேன்மேலும் அதிகமாக்கி உள்ளது. அத்துடன் இந்த ட்ரெய்லரின் இறுதியில் விடாமுயற்சி திரைப்படம் 2025 பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த ட்ரெய்லர் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தை கலக்கி வருகிறது.

விடாமுயற்சி திரைப்படத்தினை மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ