HomeBreaking Newsஆர்டிஎக்ஸ் பட இயக்குனருடன் கைகோர்க்கும் துல்கர் சல்மான்.... மிரட்டலான போஸ்டருடன் வெளியான டைட்டில்!

ஆர்டிஎக்ஸ் பட இயக்குனருடன் கைகோர்க்கும் துல்கர் சல்மான்…. மிரட்டலான போஸ்டருடன் வெளியான டைட்டில்!

-

- Advertisement -

துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.ஆர்டிஎக்ஸ் பட இயக்குனருடன் கைகோர்க்கும் துல்கர் சல்மான்.... மிரட்டலான போஸ்டருடன் வெளியான டைட்டில்!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு லக்கி பாஸ்கர் எனும் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதேசமயம் இவர் காந்தா போன்ற அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் துல்கர் சல்மான், ஆர்டிஎக்ஸ் படத்தின் இயக்குனர் நகாஸ் ஹிதாயத் உடன் கூட்டணி அமைத்துள்ளார். ஏற்கனவே இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தது. அதே சமயம் இந்த படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிக்க போவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆர்டிஎக்ஸ் பட இயக்குனருடன் கைகோர்க்கும் துல்கர் சல்மான்.... மிரட்டலான போஸ்டருடன் வெளியான டைட்டில்!அதன்படி இந்த படத்திற்கு I’M GAME என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்டரை பார்க்கும்போது இப்படம் கேம் தொடர்பான கதைக்களம் போல் தெரிகிறது. மேலும் இந்த படத்தை வேப்பெரர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் துல்கர் சல்மான் தயாரிப்பாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தது இந்த படமானது தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ