குட் பேட் அக்லி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. ஏனென்றால் அஜித்தின் தீவிர ரசிகனான ஆதிக் ரவிச்சந்திரன் டீசரிலேயே ரசிகர்களுக்கு தரமான விருந்து படைத்திருந்தார். அடுத்தது OG சம்பவம் பாடலில் ஜி.வி. பிரகாஷின் இசையும், குரலும் அதகளம் செய்திருந்தது. இதற்கிடையில் இந்த படத்தில் நடிகர் அஜித் தன்னுடைய விண்டேஜ் கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். மேலும் தீனா படத்தில் இடம்பெற்ற ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’, ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ ஆகிய பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்று இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளிவந்தது. இவ்வாறு இப்படம் தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்களும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிக்கொண்டே இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரைலரிலும் நடிகர் அஜித், விண்டேஜ் லுக்குகளில் காண்பிக்கப்பட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் வழக்கம்போல் ஆக்ஷன் காட்சிகளில் தூள் கிளப்பி இருக்கிறார். அவர் போட்டு வரும் ஒவ்வொரு காஸ்டியூமும் ரசிகர்களை கவரும் விதத்தில் இருக்கிறது. இது தவிர இந்த ட்ரெய்லரில் திரிஷா, யோகி பாபு, பிரபு போன்றோர் காட்டப்பட்டுள்ளனர். அர்ஜுன் தாஸ் தான் இப்படத்தின் மெயின் வில்லன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதியில் நடிகை சிம்ரன் காட்டப்படுகிறார். அதுமட்டுமில்லாமல் இதில் மங்காத்தா போன்ற படங்களின் குறியீடுகளும் காட்டப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லரை மரண மாஸாக தந்து மீண்டும் அதிரடி சம்பவத்தை செய்துள்ளார் ஃபேன் பாய் ஆதிக். எனவே ரசிகர்கள் இந்த ட்ரெய்லரை வைரலாக்கி வருவதோடு வெய்ட்டிங்கிலேயே வெறியாகுகிறார்கள்.
மேலும் குட் பேட் அக்லி படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அபிநந்தன் ராமானுஜம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இதில் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.