spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking News'பென்ஸ்' படத்தின் வில்லன் இவர்தான்.... அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

‘பென்ஸ்’ படத்தின் வில்லன் இவர்தான்…. அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

-

- Advertisement -

பென்ஸ் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.'பென்ஸ்' படத்தின் வில்லன் இவர்தான்.... அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது அடுத்த படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் பென்ஸ் திரைப்படத்தை தயாரிக்கிறார் லோகேஷ். இவருடன் இணைந்து தி ரூட், நிறுவனமும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். இந்த படமானது லோகேஷ் கனகராஜின் எல்சியு- வில் இணைந்துள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது.

we-r-hiring

அதைத் தொடர்ந்து இந்த படத்தின் வில்லன் யார்? என்பதை படக்குழு இன்று (ஜூன் 4) அறிவிப்பதாக தெரிவித்திருந்தது. அதன்படி இந்த படத்தில் நடிகர் நிவின் பாலி வில்லனாக நடிக்கிறார் என படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் நிவின் பாலி முகத்தில் ரத்தக் கறையுடன் கொடூர வில்லன் போல் காட்டப்பட்டுள்ளார். மேலும் இவர், பென்ஸ் திரைப்படத்தில் வால்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும்போது நிவின் பாலி இரட்டை வேடங்களில் நடிப்பது போல் தெரிகிறது. இந்த வீடியோவும் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ