HomeBreaking Newsதவெக-வை வீழ்த்த திமுக - அதிமுக ரகசிய தேர்தல் புரிதலா? குதிரை பேர அரசியலால் ஜனநாயகம்...

தவெக-வை வீழ்த்த திமுக – அதிமுக ரகசிய தேர்தல் புரிதலா? குதிரை பேர அரசியலால் ஜனநாயகம் நசுங்குவதாகக் குற்றச்சாட்டு!

-

- Advertisement -

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசின் அசுர வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த, பாரம்பரிய திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களுக்குள் ஒரு ரகசிய தேர்தல் புரிதலை (Electoral Understanding) ஏற்படுத்திக் கொள்ள திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.தவெக-வை வீழ்த்த திமுக - அதிமுக ரகசிய தேர்தல் புரிதலா? குதிரை பேர அரசியலால் ஜனநாயகம் நசுங்குவதாகக் குற்றச்சாட்டு!

​கூட்டணி இல்லை; தேர்தல் புரிதல்?
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் அளித்த நேர்காணலில், “திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் அதிகாரப்பூர்வமாகக் கூட்டணி அமைக்காவிட்டாலும், தவெக-வை எதிர்கொள்ள ஒரு ரகசிய தேர்தல் புரிதலை ஏற்படுத்திக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது. உதாரணமாக, தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் அடுத்தடுத்த ராஜினாமாவால் ஏற்படும் இடைத்தேர்தல்களில், திமுக போட்டியிடும் இடத்தில் அதிமுக வேட்பாளரை நிறுத்தாமல் மறைமுகமாக ஆதரிப்பது, அதேபோல் அதிமுக களம் காணும் தொகுதிகளில் திமுக போட்டியிடாமல் விலகிக் கொள்வது போன்ற வியூகங்களை வகுக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். ​ஏற்கனவே இரு கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்களிடையே தவெக-வை எதிர்க்க வேண்டும் என்ற பொதுவான மனநிலை உருவாகிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

we-r-hiring

தவெக-வை வீழ்த்த திமுக - அதிமுக ரகசிய தேர்தல் புரிதலா? குதிரை பேர அரசியலால் ஜனநாயகம் நசுங்குவதாகக் குற்றச்சாட்டு!

​குதிரை பேர அரசியல் – சீமான், கம்யூனிஸ்டுகளுக்கு அழைப்பு
தற்போது தமிழகத்தில் தவெக அரசைத் தக்கவைக்கவும், பலப்படுத்தவும் சட்டமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து ‘குதிரை பேர அரசியல்’ தீவிரமாக நடந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் தவெக சின்னத்தில் போட்டியிடுவது ஜனநாயகத்தை நசுக்கும் செயல் என்றும் விமர்சிக்கப்படுகிறது.

​இந்த ஜனநாயக விரோதப் போக்கைத் தடுத்து நிறுத்த, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சிபிஐ, சிபிஎம் போன்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பாமக ஆகிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களுக்குள் இருக்கும் தற்காலிக அரசியல் லாபங்களை மறந்து, குறிப்பிட்ட தொகுதிகளில் பொது வேட்பாளர்களை நிறுத்தியோ அல்லது பரஸ்பர ஆதரவு அளித்தோ தவெக-வின் வியூகத்தை முறியடிக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.

​திமுக கூட்டணியிலிருந்து விலகிய கட்சிகள் மீது விமர்சனம்
கடந்த தேர்தல்களில் திமுக தயவால் வெற்றி பெற்றுவிட்டு, தற்போது திமுக தோல்வியடைந்தவுடன் தவெக பக்கம் சாய்ந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் ஐயுஎம்எல் (IUML) போன்ற கட்சிகளின் நிலைப்பாடு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பதவிகளையும் தற்காலிக அரசியல் லாபங்களையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இக்கட்சிகள் செயல்படுவதாகவும், கடந்த காலங்களில் திமுக கூட்டணியில் இருந்தபோது மக்கள் பிரச்சினைகளுக்காகப் பேசாதவர்கள், தற்போது தவெக ஆட்சியில் நடக்கும் தவறுகளையும் தட்டிக்கேட்கத் தயங்குவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தவெக-வை வீழ்த்த திமுக - அதிமுக ரகசிய தேர்தல் புரிதலா? குதிரை பேர அரசியலால் ஜனநாயகம் நசுங்குவதாகக் குற்றச்சாட்டு!

​பாஜக-வின் ‘பொறுத்திருந்து பார்க்கும்’ உத்தி
தமிழகத்தின் தற்போதைய பரபரப்பான அரசியல் சூழலில் மத்திய ஆளும் கட்சியான பாஜக தற்போதைக்கு அமைதி காத்து வருவதாகத் தெரிகிறது. 2029 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வரை தமிழக அரசியலில் நேரடியாகத் தலையிடாமல், தவெக அரசின் நகர்வுகளையும், பிற கட்சிகளின் பிளவுகளையும் உன்னிப்பாகக் கவனிக்கும் ‘வெயிட் அண்ட் சீ’ (Wait and See) உத்தியை டெல்லி தலைமை கையாண்டு வருவதாகப் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்  தெரிவித்துள்ளார். ​திராவிடக் கட்சிகள் மீதான மக்களின் 40 ஆண்டுகால கோபமே தவெக தலைவர் விஜய்யின் தற்போதைய அரசியல் பலத்திற்குக் காரணம் என்றாலும், தவெக அரசு மக்கள் பிரச்சினைகளுக்குப் பதில் சொல்லாமல் தவிர்ப்பதும், முறையான மக்கள் தொடர்பு இல்லாததும் போகப்போக தவெக-விற்கு எதிரான அலையை உருவாக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

“விஜய் அரசு வெறும் ரீல்ஸ் நாடகம் நடத்துகிறது!” – பழனி கோவில் நில ஊழல் மற்றும் குதிரை பேரப் புகார்களை முன்வைத்து வழக்கறிஞர் சுசீல் ராஜ்குமார் அதிரடி குற்றச்சாட்டு!

MUST READ