spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsமீண்டும் அலப்பறையை கிளப்ப வரும் முத்துவேல் பாண்டியன்.... அதிரடியாக வெளியான 'ஜெயிலர் 2' அறிவிப்பு!

மீண்டும் அலப்பறையை கிளப்ப வரும் முத்துவேல் பாண்டியன்…. அதிரடியாக வெளியான ‘ஜெயிலர் 2’ அறிவிப்பு!

-

- Advertisement -

ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு டீசர் வெளியாகி உள்ளது.மீண்டும் அலப்பறையை கிளப்ப வரும் முத்துவேல் பாண்டியன்.... அதிரடியாக வெளியான 'ஜெயிலர் 2' அறிவிப்பு!

கடந்த 2023 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் இந்த படத்தை இயக்கியிருந்தார். அனிருத் இதற்கு இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் நடிகர் ரஜினி ஓய்வு பெற்ற ஜெயிலராக முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். இயக்குனர் நெல்சன் இந்த படத்தின் ஒவ்வொரு ஃபிரேமையும் ரஜினி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அதிரடியாக செதுக்கியிருந்தார். அதேபோல் அனிருத்தின் இசை இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அதன்படி காட்சிக்கு காட்சி மரண மாஸ் காட்டி திரையரங்கையே அதிர வைத்தது. மேலும் இந்த படம் கிட்டத்தட்ட ரூ. 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது.

we-r-hiring

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு ஜெயிலர் 2 படத்தை இயக்க போவதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி வந்தது. அதன்படி இன்று (ஜனவரி 14) பொங்கல் விருந்தாக ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் நெல்சன் பாணியில் நகைச்சுவையான காட்சிகள் இடம்பெற்று இருந்தது. அதன்படி நெல்சனும் அனிருத்தும் பேசிக் கொண்டிருக்கையில் அதிரடியாக என்ட்ரி கொடுக்கிறார் சூப்பர் ஸ்டார். ஜெயிலர் முதல் பாகத்தில் இடம் பெற்ற பின்னணி இசையுடன் பயங்கரமான ஆக்ஷன் காட்சி ஒன்றுடன் ஜெயிலர் 2 படத்தினை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த டீசரின் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

MUST READ